மரத்தில் தோன்றிய அதிசய பிள்ளையார்

advertisement

பதுளை - ஹாலிஎல, குயின்ஸ்டவுன் பகுதியில் 100 வருடங்கள் பழமையான பூ மரம் ஒன்றில் பிள்ளையாரின் உருவம் சுயமாக தோன்றியுள்ளது.

ஹாலிஎல, குயின்டவுன் கிருபானந்தவாரியர் பாடசாலை வளாகத்தில் உள்ள பூ மரத்தின் வேர்ப்பகுயிலேயே இவ்வாறு பிள்ளையாரின் உருவம் காணப்படுகின்றது.

கடந்த விநாயக சதுர்த்தி தினத்தின் போது தீச்சட்டி ஏந்தி வந்த ஒரு பக்தரின் வாக்கின் முலம் இந்த பிள்ளையாரின் உருவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரத்தில் தோன்றியுள்ள பிள்ளையாரை வழிபாடு செய்வதற்கு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், பாடசாலைக்கு அருகில் இந்த பிள்ளையார் உருவம் காணப்படுவதால் மாணவர்கள் பலர் இங்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

மரத்தின் வேரில் சுயமாகிய தோன்றியுள்ள பிள்ளையாரை பார்ப்பதற்கு பலரும் குயின்ஸ்டவுன் பகுதிக்கு வருகைத்தந்த வண்ணம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.