ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: நவம்பர் 15-இல் வெளியாகும் என தகவல்

Report
1Shares

ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஜியோணி M7 பவர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஜியோணி M7 ஸ்மார்ட்போனுடன் M7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபுல் ஸ்கிரீன், 18:9 டிஸ்ப்ளே கொண்ட ஜியோணி M7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஜியோணி M7 பவர் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 720x1440 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் எல்இடி பிளாஷ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 5000 எம்ஏஎச் பேட்டரி

அமிகோ ஓ.எஸ். 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோணி M7 பவர் ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கைரேகை ஸ்கேனர் மூலம் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய வேண்டும். இந்தியாவில் ஒப்போ F5 மற்றும் விவோ வி7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோணி M7 பவர் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

410 total views