ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி அறிவிப்பு ! ஏர்டல் வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம பாருங்க !

Report
3Shares

ஜியோ புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் தங்களது சலுகைகளை மாற்றியமைத்து வரும் நிலையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டி ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நிறுவனமும் புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

சமீபத்தில் ஜியோ ரூ.149 திட்டத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்த 1 ஜிபி டேட்டா அளவு 1.5 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.449 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி தற்சமயம் 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

73 total views