சினிமா உலகை உலுக்கியுள்ள மரணம்

Report
11Shares

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் கட்டுரைகள் ,கவிதைகள் மற்றுமின்றி பல திரைப்படங்களுக்கு வசனம் எழுத்தியுள்ளார்.

நாயகன், குணா, பாட்ஷா, ஜீன்ஸ், சிட்டிசன், புதுப்பேட்டை போன்ற படங்களுக்கு இவர்தான் வசனம் எழுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரியில் 1946-ல் ஜூலை 5-ம் திகதி பிறந்தார்.

இவருக்கு வயது 71 ஆகும்.

இவரின் தந்தை தமிழாசிரியர்.

11ஆம் வகுப்பு வரை கல்வி கற்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969-ம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார்.

அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

அதில் சில கணையாழி இதழில் வெளிவந்தன.

பின்னர், அதிகாரி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்த அவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவர் , இயக்குநர் பாலசந்தரிடம் மூன்று திரைப்படங்களிலும் கே.பாக்யராஜிடம் சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

பின்னர், 'இது நம்ம ஆளு' என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய 'மெர்க்குரி பூக்கள்', 'இரும்புக் குதிரைகள்' என்ற நாவல்கள் புகழ்பெற்றவை.

ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்தில், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற வசனம், பாலகுமாரன் எழுதியது.

தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பாலகுமாரன் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் , பாலகுமாரின் மறைவுக்கு திரைத்துறையினர் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

1129 total views