தமிழகத்தில் டெங்குவுடன் பரவும் பன்றிக் காய்ச்சல்

Report
1Shares

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பன்றிக் காய்ச்சலும் பரவிவருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிகப்பட்சமாக 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் சுமார் 1,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்னர்.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சலும் தற்போது பரவி வருகிறது. கடந்த 4 மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

828 total views