மோடி அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம்

Report
1Shares

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ளார்.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, வரும் 21-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்லவுள்ளார். சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

691 total views