சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

Report
1Shares

சென்னையில் மன அழுத்தம், வேலைப்பளு, குடும்ப சூழ்நிலை, மேலதிகாரிகளின் டார்ச்சர் உள்பட பல்வேறு காரணங்களால் காவலர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது

சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் என்ற 27 வயது சென்னை ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜோசப் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

பெருகி வரும் காவலர்களின் தற்கொலைக்கு அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணம் என்பதால் காவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை மேலதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் பணிச்சுமை காரணமாக சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல்நிலைய காவலர் பாலமுருகன் என்பவர் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

597 total views