மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு கட்சிப் பெயரை ரஜினி விரைவில் அறிவிப்பார்: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் நம்பிக்கை

Report
1Shares

ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். மன்றத்தின் அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிந்த பிறகு, உரிய நேரத் தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை ரஜினி அறிவிப் பார் என்று மன்றத்தின் மாநி லச் செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறினார்.

ரஜினி அறிவுரை

தமிழகம், புதுச்சேரி முழுவதும் இருந்து 35-க்கும் மேற்பட்ட இளைஞர் அணி மாவட் டச் செயலாளர்கள் நேற்று சென்னை கோடம்பாக்கத் தில் உள்ள ராகவேந்திரா திரு மண மண்டபத்துக்கு வந்தனர். அவர்களது செல்போன் கள் அனைத்தும் பெறப்பட்ட பிறகு, ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறி யதாவது:

ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக, கடந்த 10-ம் தேதி அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் ரஜினி சந்தித் துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்களை தற்போது சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து இளைஞர் அணி செயலாளர்களிடம் ரஜினி கேட்டறிந்தார். நகர, ஒன்றிய அமைப்பு வாரியாக மன்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேட்டார். அடுத்த கட்டமாக மகளிர் அணி செயலாளர்களை ரஜினி விரைவில் சந்திக்க உள்ளார்.

இளைஞர் அணி கட்டமைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தன. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும். மன்றத்தின் அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிந்த பிறகு, உரிய நேரத் தில் கட்சியின் பெயர், கொடி யை ரஜினி அறிவிப்பார்.

உறுப்பினர் சேர்க்கை

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் சேர்க்கையில் எவ்வித தொய்வும் இல்லை. நிதி நெருக்கடி இருப்பதாக மன்ற நிர்வாகிகள் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறியதாவது:

இளைஞர் அணி கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஜினி பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங் கினார்.

‘‘என் பின்னால் யாரும் இல்லை. யார் கேட்டாலும் இதை தைரியமாகச் சொல்லுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதியில் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தாலே, நம் மன்றத்தில் இளைஞர்கள் தானாக வந்து சேர்வார்கள். மக்கள் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். நல்லவர்களாக இருங்கள். குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ பிரச்சினை உட் பட தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியான பிரச்சினை கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை பணியை நாங்கள் தீவிரப்படுத்தாவிட்டாலும், ரஜினியை விரும்புவோர் தாமாக முன்வந்து மக்கள் மன்றத்தில் இணை கின்றனர். ரஜினி விரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிப்பார். அதற்கு முன்னதாக மிகப்பெரிய தொண்டர்கள் கூட்டத்தை உருவாக்கிவிடு வோம். இவ்வாறு ரஜினி மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

535 total views