கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு: காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளுக்கிடையே கடும் போட்டி; களத்தில் 2,622 வேட்பாளர்கள்

Report
2Shares

கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு தொகுதி தவிர மற்ற 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் தலா 222 தொகுதிகளிலும் மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணி 219 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, எம்இபி, சுயேச்சைகள் உட்பட மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 2622 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர்.

396 total views