குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் பலி

Report
1Shares

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர்.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பிய போது, திடீரென காட்டுத் தீ பற்றிக்கொண்டது. இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.

உடனடி நடவடிக்கையாக மலைப்பகுதியில் இருப்பவர்களை கண்டறிவதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம் உள்ளூர் மக்களும் உடனடியாக களத்தில் இறங்கினர்.

காயமடைந்தவர்களை தோளில் சுமந்தபடி அடிவாரத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்தவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுவரை மொத்தம் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

776 total views