அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்த பாஜக பெண் நிர்வாகி: அதிர்ச்சி தகவல்

Report
8Shares

விவசாயிகளின் போராட்டத்தை டெல்லி வரை சென்று நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வரும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அய்யாக்கண்ணு தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் கோவில் அருகே துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடமும் பக்தர்களிடமும் விநியோகம் செய்து வந்தார். அதில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அங்கு வந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கோவிலில் துண்டு பிரசுரங்கள் கொடுக்க கூடாது என்று அய்யாக்கண்ணுவிடம் வாதம் செய்தார். ஒருகட்டத்தில் இருதரப்பினர்களுக்கும் வாதங்கள் அதிகரிக்க, திடீரென அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அந்த பெண் அறைந்தார். இதனையடுத்து அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் அந்த பெண் நிர்வாகியை தாக்க முயற்சித்தனர். ஆனால் அந்த பெண் நிர்வாகி தனது காலில் இருந்த செருப்பை தூக்கி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த சமயத்தில் அங்கிருந்த பக்தர்கள் இருதரப்பினர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் கோவில் அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

704 total views