ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல்

Report
2Shares

ராணுவத்திற்கு தேவையான ரூ. 15ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் , துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில், ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பில் 7.40 லட்சம் தாக்குதல் ரைபில் துப்பாக்கிகள் ரூ. 1,819 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள்,, ராணுவத்திற்கு ரூ.982 கோடி மதிப்பில் 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் என 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

952 total views