ஆப்ரேஷனுக்கும் ஆதார் தேவையா?

Report
1Shares

ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்த நிகழ்வு ஒன்று அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

அரியானா மாநிலம் குர்கானில் முன்னி கேவத் என்கிற பெண்ணுக்குப் பிரசவ வலி எற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் கணவர் வலியால் துடித்த மனைவியை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் ஆதார் அட்டை இருந்தால்தான் அவரது மனைவி முன்னி கேவத்தை பிரசவப் பிரிவில் சேர்போம் என தெரிவித்தனர். அவரது கணவர் வீட்டில் இருக்கும் ஆதார் அட்டை எடுத்து வருவதாகவும் அதற்குள் தன் மனைவியை பிரசவ பிரிவில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சேவிலியர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த முன்னி கேவத் பிரசவ பிரிவுக்கு வெளியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் போலிஸாரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து மருத்துவரும், செவிலியர் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

412 total views