கூண்டிலிருந்து புறாவை பறக்கவிட்டதால் சிறுவனுக்கு நேர்ந்த கெதி

Report
11Shares

பெங்களூரில் கூண்டிலிருந்து புறாவை பறக்கவிட்டதால் 2 வயது சிறுவனை பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த வாரம் ரமேஷ் என்ற சிறுவன் 300 ரூபாய் கொடுத்து மூன்று புறாக்களை வாங்கி வந்து தனது கூட்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளான்.இதைப் பார்த்து வெங்கடேஷ், புறாவை பார்க்க அடிக்கடி வந்தாதகவும், புறாவை தொடக்கூடாது என்று ரமேஷ் கண்டித்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதனன்று ரமேஷ் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் மற்றும் அவனுடைய மூத்த சகோதரரும், கூண்டை திறந்து புறாவை பறக்க விட்டுள்ளனர்.இதையடுத்து வீடு திரும்பிய போது, கூண்டில் புறா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், சத்தம் போட்டு வெங்கடேசிடம் விசாரிக்க, தவறை ஒப்புக் கொண்டுள்ளான்.

பின் இருவரும் புறாவை தேடி சென்றுள்ளனர்.ஒரு இடத்தில் புறாவை லாவகமாக கையில் பிடித்தான் ரமேஷ், இதைக் கண்டு பொறாமை கொண்ட வெங்கடேஷ் மீண்டும், ரமேஷ் கையை தட்டி விட்டு, புறாவை பறக்க விட்டுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வெங்கடேஷின் கழுத்தை நெறித்துள்ளான்.இதில் வெங்கடேஷிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.இதனால் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியிக்கு கொண்டு சென்றனர்.

524 total views