கந்துவட்டி கடன் வாங்கியதால் வியாபாரிக்கு நேர்ந்த சோகம்

Report
4Shares

சிவமொக்கா டவுன் சீஹேகட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 42) வெற்றிலை வியாபாரி. இந்த நிலையில் சதீஷ் வியாபாரம் செய்வதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.

அதற்கான தவணை பணத்தை முறையாக கட்டி வந்தார். இந்த நிலையில் சதீசுக்கு கடன் கொடுத்தவர் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளீர்கள்.

இதனால் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் சதீசுக்கும், கடன் கொடுத்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கடன் கொடுத்த நபர், சதீசை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் சதீஷ் மனம் உடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத போது சதீஷ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் சதீசின் வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி கொண்டனர். அந்த கடிதத்தில் சதீஷ் எனக்கு கந்துவட்டி கொடுத்தவர் மீட்டர் வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டினார்.

இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று உருக்கமாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர்.

இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சதீசுக்கு கடன் கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

504 total views