விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்
Reportஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஆஜரானார்.
விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அன்றைய தினம் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஷீலா பாலகிருஷ்ணன் இன்று(11-ம் தேதி) மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இது வரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில், ராமமோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் அண் ணன் மகன் தீபக், மருத்துவர் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அளிக்க அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் வழங்கிய காலக்கெடு நாளையுடன் முடிகிறது என்பது கவனிக்கத்தக்கது.