வால்மீகியை விமர்சித்ததால் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

Report
2Shares

ம.பி.,யில் நடந்த நிகழ்ச்சியில், வால்மீகியை, கொள்ளைக்காரன் என விமர்சித்த, மாநில அமைச்சருக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார்.

ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மண்ட்சோர் மாவட்டத்தில், அகில இந்திய வால்மீகி மகா சபை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், அர்ச்சனா சிட்னீஸ், வால்மீகியை, 'கொள்ளைக்காரன்' என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்து, அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மன்னிப்பு கேட்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களிடம், அமைச்சர் அர்ச்சனா மன்னிப்பு கேட்டார். ராமாயணம், மஹாபாரதம் என்ற, இரண்டு பழம்பெரும் இதிகாசங்களில், ராமாயணத்தை இயற்றியவர், மஹரிஷி வால்மீகி. இளமைக்காலத்தில், வழிப்பறி கொள்ளையனாக இருந்து, நாரத முனிவரின் அறிவுரையால் மனம் திருந்தி, இறை வழிபாட்டில் ஈடுபட்டு, பல ஆண்டு காலம் தவமிருந்து, மஹரிஷியானார்.

அப்போது, அவரை சுற்றி, கரையான் புற்று வளர்ந்ததால், 'வால்மீகி' என, அழைக்கப்படுகிறார்.

77 total views