மோடிக்கு பதிலடி கொடுத்த ஜிக்னேஷ் மேவானி

Report
1Shares

டெல்லியில் ஆளும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் எப்படியோ தெரியவில்லை, ஆனால் ஜிக்னேஷ் மேவானி பெரிய தலைவலியாக மாறியுள்ளார். குஜராத் சட்ட மன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெறும் முன்பே இவர் லைம் லைட்டிற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று டெல்லியில் இவர் நடத்திய போராட்டம் பாஜக அரசை மீண்டும் ஒருமுறை உலுக்கி இருக்கிறது. டெல்லி அரசு இவரது போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்றாலும் இவர் தடையை மீறி போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தில் இவர் காதலர் தினம் குறித்து பேசினார். வாருங்கள் அனைவரும் காதலர் தினம் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் போராட்டங்கள் நடக்கும் ஜந்தர் மாந்தர் பகுதியில் போராட்டம் நடந்த தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு போராட அனுமதி கேட்ட ஜிக்னேஷ் மேவானிக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் அவர் தடையை மீறி போராட்டம் நடத்தினார். இதில் பல பேர் கலந்து கொண்டார்கள்.

இந்த போராட்டத்தில் கன்ஹையா குமார், பிரசாந்த் பூஷன், உமர் காலித், ஷீலா ரஷித், அஜித் கோகாய் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். பீமா கோரிகான் கலவரத்தில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்யவேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பேசிய ஜிக்னேஷ், ''முஸ்லிம்கள் பலர் லவ் ஜிஹாத் என்று கூறப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். யாருமே லவ் ஜிஹாத் செய்யவில்லை. நாங்கள் லவ் ஜிஹாத் செய்யவில்லை. நாங்கள் காதலிக்கிறோம். காதலை எதிர்க்கும் பாஜக போன்றவர்களுக்கு எதிராக நாம் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''நான் மனுநீதி, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என இரண்டு புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறேன். இரண்டில் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்க போகிறேன்'' என்று பாஜக கட்சியின் கொள்கைகளை சாடி பேசினார். இவர் போராட்டத்தின் கனல் இன்னும் டெல்லியில் பரவிக் கொண்டு இருக்கிறது.

871 total views