2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி அடையும்

Report
1Shares

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நோட்டு ஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 2018ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்றும், குறிப்பாக 2018ம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம் என்று தகவல் அளித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் 2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

862 total views