60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞன்

Report
2Shares

புதுச்சேரியில் 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த 30 வயது பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மேரி ( 60). 4 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மேரி மீண்டும் வீடு திரும்பவில்லை. கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேரியை தேடிவந்தனர்.

கடந்த 3ம் தேதி தென்னந்தோப்பில் தென்னை ஓலை குவியலில் அழுகிய நிலையில் மூதாட்டி மேரி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் மேரி கத்தியால் குத்தப்பட்டு, பிறகு, பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

வடக்குப்பகுதி போலீஸ் எஸ்பி ரச்சனாசிங் மேற்பார்வையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு அதிரப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

சம்பவம் நடந்த தென்னந்தோப்பிற்கு கடந்த சில நாட்களில் யாரெல்லாம் போனார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூ வியாபாரியான, பிரகாஷ்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து மடக்கி மடக்கி கேள்விகளை கேட்டு விசாரித்தபோது மூதாட்டியை பலாத்காரம் செய்து பிறகு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் அன்று தென்னந்தோப்பில் தனியாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது மேரி அங்கு வந்ததாகவும், ஏற்கனவே அவர் மது அருந்துபவர் என்பது தனக்கு தெரியும் என்பதால் அவரையும் மது அருந்த அழைத்ததாகவும், இருவரும் சேர்ந்து குடித்ததாகவும் தனது வாக்குமூலத்தில் பிரகாஷ் கூறியுள்ளார்.

அப்போது, அவரிடம் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவரோ என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். என்னிடமிருந்த கத்தியால் மேரியின் இடுப்பில் குத்தினேன். அவர் மயங்கி விழுந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன்.

மயக்கம் தெளிந்தால் அவர் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடுவார் என பயந்து கழுத்தை நெரித்து கொலை செய்து பிறகு அவரது உடலின் மீது அங்கு கிடந்த தென்னை ஓலை மற்றும் மட்டை குவியல்களை போட்டு மறைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். இவ்வாறு பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் பிரகாசிடம் இருந்து கத்தி, ரத்த கறை படிந்த துணிகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். பிரகாஷுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

811 total views