‛பப்பு' விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

Report
4Shares

காங்., துணை தலைவர் ராகுலை ‛பப்பு' என கேலி செய்யும் பா.ஜ.,வின் விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்குக்காக, பா.ஜ., தயாரித்துள்ள டிவி மற்றும் ரேடியோ விளம்பரப்படத்துக்கு அனுமதி கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. அதில் இடம்பெற்றுள்ள ‛பப்பு' என்ற வார்த்தை மரியாதைக்குறைவாக இருப்பதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம் அந்த விளம்பரத்துக்கு தடை விதித்துள்ளது.

காங்., துணை தலைவர் ராகுலை சின்ன பையன் என பொருள்படும் விதமாக ‛பப்பு' எனும் வார்த்தையை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‛பப்பு'எனும் வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பவிருப்பதாக பா.ஜ.,தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

833 total views