ரசகுல்லா யாருக்கு சொந்தம்...?

Report
3Shares

கோல்கட்டா: 'ரசகுல்லா' இனிப்பின் மீதான தன் உரிமையை நிலைநாட்ட, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கோல்கட்டா என்றாலே, மக்கள் நினைவில் வருவது, ரசகுல்லா இனிப்பு தான். இந்த இனிப்பை, தாங்கள் கண்டுபிடித்ததாக, ஒடிசா மாநில மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர்.மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல இனிப்பு தயாரிப்பாளரான, நவீன் சந்திர தாஸ், 1868 முதல், தங்கள் நிறுவனம், ரசகுல்லா தயாரித்து வருவதாக கூறியதை அடுத்து, புவிசார் குறியீடு பெறுவது குறித்து, ஒடிசா அரசு முயற்சித்து வருகிறது.

இந்த உரிமை போராட்டம் நீடித்து வரும் நிலையில், ''எந்த நிலையிலும், ரசகுல்லாவின் மீதான உரிமையை ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என, மேற்கு வங்க மாநில உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர், அப்துர் ரஜாச் மோல்லா கூறியுள்ளார். இதையடுத்து, ரசகுல்லா மீதான, தன் உரிமையை நிலைநாட்ட, மேற்கு வங்க அரசு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

402 total views