சோதனை நாளை வரை தொடரும்!: வருமான வரித்துறை

Report
6Shares

சசிகலா குடுமபத்தினரின் வீட்டில் காலை முதல் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை நாளை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என மொத்தம் 150 இடங்களுக்கும் இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 1800 அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனை தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த சோதனை நாளை வரை இருக்கும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

97 total views