ரெய்டு நடக்கும் நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்.

Report
11Shares

வருமான வரித்துறை சோதனை நடந்தபோது சாதாரணமாக இருந்தார் தினகரன். சோதனை நடக்கும் நேரத்தில் சாதாரணமாக மனைவி மகளுடன் வீட்டில் கோ பூஜை நடத்தினார்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை மேலும் வேறு சில நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும் பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் சார்ந்த சசிகலா, தினகரன், திவாகரன் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள், கட்சிபிரமுகர்கள் வீடு அலுவலகங்களில் நடக்கிறது.

சோதனை நடந்த போது செய்தியாளர்கள், கட்சிக்காரர்கள் அடையாரில் உள்ள டிடிவி இல்லம் முன்பு கூடி நின்றனர். தினகரன் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்பட்டாலும் தினகரன் சாதாரணமாக தனது மனைவி அனுராதா மற்றும் மகளுடன் கோபூஜை செய்தார். சாதாரணமாக செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஒரு அதிகாரி வந்தார் அவரும் சென்று விட்டார், மீண்டும் வருவாரா என்று தெரியாது என்று சிரித்தபடி கூறினார்.

1122 total views