நாக்கால் தரையை சுத்தம் செய்ய சொல்லி தண்டனை வழங்கிய அவலம்!...

Report
211Shares

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதி கிராம பஞ்சாயத்தில், பெண் ஒருவரை, நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

தனது கடையில் வாடகைக்கு இருக்கும் அருண் சிங் என்பவர், வாடகை பாக்கி தரவில்லை எனக் கூறி ராம் துலரி தேவி என்பவர் பஞ்சாயத்தை நாடியதாக கூறப்படுகிறது.

பஞ்சாயத்தில் அருண் சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், ராம் துலரி தேவியை நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்து பஞ்சாயத்தார் கொடூர தண்டனை அளித்துள்ளனர்.

இது குறித்து ராம் துலரி தேவி அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7943 total views