டிடிவி தினகரன் மீது ஜெ. தீபக் குற்றச்சாட்டு

advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சசிகலா பரோலில் வந்து பார்ப்பதை டிடிவி தினகரன் தான் தடுக்கிறார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது.இதனால் நடராஜனை பார்க்க சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருவார் என கூறப்பட்டது. ஆனால் நடராஜனை பார்க்க சசிகலா விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. இதனிடையே மருத்துவமனையில் நடராஜனை

மருத்துவமனையில் கவனித்துக் கொள்ளும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறுகையில், தனது மனைவி சசிகலாவை பார்க்க நடராஜன் விரும்புகிறார். ஆனால் சசிகலா பார்க்க மறுத்துவிட்டார்.

இதனால் நடராஜன் மிகவும் வேதனையில் இருக்கிறார். சசிகலாவுக்காக 33 ஆண்டுகாலம் தம்முடைய வாழ்க்கையை தியாகம் செய்தவர் நடராஜன்.நடராஜனை சந்திப்பதால் சசிகலாவின் அரசியல் இமேஜ் பாதிக்கும் என தினகரன்தான் தடுத்து வருகிறார். இது எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.