பரிஸ் ஒப்பந்தத்துக்கு மீண்டும் திரும்பும் அமெரிக்கா!!

Report
2Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா மீண்டும் பரிஸ் ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று புதன்கிழமை டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து தெரிவிக்கும் போது, 'உண்மையில் காலநிலை பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களில் உடன்படிக்கை இல்லை!' என தெரிவித்திருந்தார். மேலும் பரிஸ் ஒப்பந்தத்தில் இணைவது கோட்பாட்டின் படி அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம், ஜூன் 1 ஆம் திகதி, ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'அமெரிக்காவை மீண்டும் பரிஸ் ஒப்பந்தத்தில் இணைப்பேன்!' என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் இரு தடவைகள் ட்ரம்பினைச் சந்தித்திருந்தார். தேசிய நாள் நிகழ்வுக்கு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருகை தந்திருந்த போது, இது குறித்து இம்மானுவல் மக்ரோன் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்தியோகபூர்வமாக ட்ரம்ப் இதனை அறிவிக்கவில்லை என்றபோதும், விரைவில் மீண்டும் அமெரிக்கா பரிஸ் ஒப்பந்தத்தில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

195 total views