அரையிறுதிக்குள் நுளைந்த இளவாலை யங்ஹென்றிஸ் அணி !

Report
3Shares

தெல்லிப்பழை நாமகள் சனசமூக நிலையத்தின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.

தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

7:2 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

யங்ஹென்றிஸ் அணியின் சார்பில் தனேஸ், ஞானரூபன் இருவரும் தலா 3 கோல்களையும், யூட்சுபன் ஓர் கோலையும் பெற்றனர்.

விண்மீன் அணியின் சார்பில் காண்டீபன் 2 கோல்களைப் பதிவுசெய்தார்.

420 total views