ஆரம்ப நிலை காச நோய் குணமாக்கும் புளிச்சக் கீரை

Report
7Shares

இக்கீரையின் பெயரைக் கேட்டதும் புளியேப்பம் வருகிறதா? பெயர்தான் புளிக்கிறதே தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவுகிற கீரை இது.

இக்கீரை உணவுக்காக மட்டுமின்றி நார் எடுக்கவும் பயன்படுகிறது. வேறெந்தக் கீரையிலும் அத்தன்மை கிடையாது.

தமிழகத்தில் இக்கீரையின் தன்தை அறிந்து எண்பவர்கள் சிலரே. ஏனெனில் இதன் பெயரே அவர்களை, அதனிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது.

இதன் சுபாவம் குளிர்ச்சி இக்கீரை ஆவணி, புரட்டாசி மாதங்களில் அதிகமாக விளைந்து விற்பனைக்கு வரும் மற்ற காலங்களிலும் கிடைக்கும்.

சித்தர் பாடல்:

தேகசித்தி யாகுஞ் சிறுகாசம மந்தமறும்;

போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் - வாகாம்

வேளிச்சிறுமான் நோக்குவிழி மென்பொடியே! நாளும்

புளிச்சிறு கீரையுண்ணும் போது. – அகத்தியர் குணபாடம்

ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும்.காம உணர்வைத் தூண்டும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்துக்க உதவும்.

புளிச்சக் கீரையை கோங்குரா என்று தெலுங்கில் சொல்வார்கள். அரைக் கீரையை கடையம்போது தக்காளிக்குப் பதில் இந்தக் கீரையைப் பக்குவப்படுத்தி சமைத்துச் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். கோடை வெப்பத்தைத் தணிப்பதில் சிறந்தது. நரம்புத் தளர்ச்சியைப் போக்கக்கூடியது.

இக்கீரை ரத்த அழுத்தம், வாத நோய், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், இதய நோய், குடற்புண், ஜீரணக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

100 கிராம் புளிச்சக் கீரையில் உள்ள சத்துகள்:

நீர்ச்சத்து - 86.4 கிராம்

புரதம் - 1.7 கிராம்

கொழுப்பு - 1.1 கிராம்

தாது உப்புகள் - 0.9 கிராம்

நார்ச்சத்து - 9.9 கிராம்

சர்க்கரைச்சத்து - 9.9 கிராம்

சுண்ணாம்புச்சத்து - 172 மி.கி

பாஸ்பரஸ் - 40 மி.கி

இரும்பு - 5.0 மி.கி

மாவுப்பொருள் - 296 யு.ஜி

தையாமின் - 0.07 மி.கி

ரிபோஃபழளேவின் - 0.39 மி.கி

நியாசின் - 1.1 மி.கி

வைட்டனிக் -சி - 20 மி.கி

கலோரித்திறன் - 56 கலோரி

புளிச்சக் கீரை உடல்நல நன்மைகள்:-

பசலை கீரை வகையை போன்றே இருப்பதுதான் தான் புளிச்சக் கீரை, இதில் இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஒரு சிறந்த சேர்வையுறுப்புக்கள். இதுதான் அமிலத்தன்மை மற்றும் முக்கிய சுவை தரக்கூடியாது. இதில் கலோரிகள் குறைவாகவும் மற்றும் நீர் உள்ளடக்கத்தை அதிகமாகவும் கொண்டுள்ளது.

இது சுகாதார உணர்வுடைய தனிநபர்கள் மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு தேர்வு செய்வதற்கும் புளிச்சக் கீரை சிறந்து விளங்குகிறது. இது சுகாதார உணர்வுடைய தனிநபர்களுக்கு, ஒரு ஆரோக்கியமான உணவு தேர்வு ஆகும்.

• இதில் வைட்டமின் A, B9, மற்றும் C. ஒரு உயர்தர மூலமாகும்.

• இதில் அதிக அளவில் பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளது.

• ஆக்ஸாலிக் அமிலம் அதிகமாக இருப்பதால், வாத நோய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

• இது சக்திவாய்ந்த மலமிளக்கி பண்புகளை கொண்டுள்ளது, இதை அதிக அளவில் ஊட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

• இது ஆற்றல் உள்ளடக்கத்தில் குறைவாக காணப்படுகிறது ஆனால் போதுமான உணவு நார்கள் வழங்குகிறது.

புளிச்சக் கீரை வழக்கமான பயன்பாடுகள் தவிர சுகாதார நலன்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதில் ஊட்டச்சத்து மருந்துகள் அதிகமாக உள்ளன, எனவே இது பலதரப்பட்ட நோய்கலுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் தடுக்கவும் உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம்:

புளிச்சக் கீரை டீ 2-3 கோப்பை தினமும் பருகினால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் காணப்படும் அந்தோசியனின்கள் தான் உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிக்கப்பத்டுலதது.

புற்றுநோய்:

ஃபிளாவனாய்டுகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் இது சிலவகை புற்றுநோய் செல்களை அழிக்க மற்றும் பரவாமல் இருக்கவும் உதவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. எனவே, அடிக்கடி இக்கீரையை சாப்புடுவதால் புற்றுநோயை தடுக்க உதவும்.

முடி:

இதன் இலைகள், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடிகளுக்கு நல்ல இயற்கை சிகிச்சையாக கருதப்படுகிறது. வழுக்கை வரமால் தவிர்ககவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்த இலைகளை அரைத்து தினமும் தடவுங்கள்.

ஜில்லிட்ட உடம்புக்கு:

சிலருக்க அடிக்கடி உடம்பு pஜல் லிட்டுவிடும் அதாவது உடம்பு குளிர்ச்சியாகிவிடும். இப்படி ஆவதால் தனக்கு ஜன்னி கண்டுவிடுமோ என்று பயந்து நடுங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு புளிச்சகீரை நன்கு உதவி செய்கிறது.

புளிச்ச கீரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால் உடலில் உஷ்ணம் ஏறி, இயற்கையான அளவுக்கு வந்துவிடும்

மலச்சிக்கில் போக:

மலச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், இக்கீரைரய மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

புளிச்சக் கீரை மற்ற நன்மைகள்:

கோனோரியா, சிறுநீர் பாதை நோய் தொற்று, ஸ்கர்வி, நாள்பட்ட நீர்க்கோப்பு, இரத்தப்போக்கு, முன்கூட்டிய முதுர்ச்சி, படை, நமைச்சல், பருவகால காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், புண்கள், கொப்புளங்கள், வீரியம் மிக்க கட்டிகள், மற்றும் அழற்சி நோய்கள்.

புளிச்சக் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்

புளிச்சக் கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்

புளிச்சக் கீரையை குடை மிளகாய், கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு இச்சை உண்டாகும் போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.

புளிச்சக் கீரைச் சாற்றில் சோம்பை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.

புளிச்சக் கீரைச் சாறில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் அரை கிராம் அளவில் சாப்பிட்டால் சீதள நோய்கள் குணமாகும்

புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் கால் வீக்கம் குணமாகும்.

புளிச்சக் கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் எலும்பு ஜீரம் தணியும்.

புளிச்சக் கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்து போகும்.

புளிச்சக் கீரைச் சாறுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.

புளிச்சக் கீரை பெண்களுக்கு மிகவும் நல்லது:

• இதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணத்தால் இது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உயர்தர கால்சியம் இருப்பதால் பெண்களின் எலும்புகளை பாதிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது.

• அறிவியல் ஆதாரம் இல்லாததால், நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் இக்கீரையை பரிந்துறைபபதில்லை.

• இது பாலுத்டும் பெண்களின் பாலை குறைத்துவிடும், எனவே பாலுத்டும் பெண்மணிகள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

• மார்பக புற்றுநோயை தடுக்கும், உடலில் கட்டிகள் குறைக்க மற்றும் உடைக்க உதவுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், கரோட்டினாய்டுகள், மற்றும் பச்சையம் என்று பல நன்மைகள் இருப்பதால் மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

• பச்சையம் உடலில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கிறது, நிபுணர்கள் புற்றுநோய் செல்கள் ஆக்சிஜன் அதிகம் உள்ள சூழலில் வாழ முடியாது என்று நம்புகிறார்கள்.

பக்க விளைவுகள்:

புளிச்சக் கீரை மிக பெரிய ஆபத்துக்களையும் கொண்டுள்ளது. உயர் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளடக்கம் காரணத்தால் இதை அதிக அளவில் உண்ணும் போது மரணம் ஏற்படும் ஆபாயம் உள்ளது.

அதிக அளவுள் சாப்பிடும் போது ஏற்படும் மற்ற பிரச்னைகள்:

சிறுநீரக கற்கள்

வயிற்று வலி

வயிற்றுப்போக்கு

குமட்டல் மற்றும் வாந்தி

தோல் வெடிப்பு

தோல் எரிச்சல்

தசை பிடிப்பு

மயக்க உணர்வு

ஈரல் நோய்

நாம் மிகச் சாதாரணமாகக் கருதும் இக்கீரையில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன பாருங்கள் கிடைக்கும்போதெல்லாம் இக்கீரையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

610 total views