உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் செப்டெம்பர் 7ம் திகதி ஆரம்பம்!!

Report
4Shares

க.பொ.த. உயர்­தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணிகள் அடுத்த மாதம் ஏழாம் திகதி முதல் ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன. இதே­வேளை தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை விடைத்­தாள் மதிப்­பீட்டுப் பணிகள் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார தெரி­வித்­துள்ளார்.

குறித்த பரீட்­சை­களின் மதிப்­பீட்டுப் பணிகள் தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் க.பொ.த. உயர்­தரப் பரீட்சை எதிர்­வரும் இரண்டாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. எனவே க.பொ.த. உயர்­தரப் பரீட்சை விடைத்­தாள் மதிப்­பீட்டுப் பணிகள் நான்கு கட்­டங்­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளன. அதற்­கி­ணங்க முதல் கட்ட மதிப்­பீட்டுப் பணிகள் செப்­டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் இரு­பதாம் திக­தி­வ­ரையும் இரண்டாம் கட்­டப்­ப­ணிகள் செப்­டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையும் நடை­பெ­ற­வுள்­ளன. அத்­துடன் மூன்றாம் கட்ட மதிப்­பீட்டுப் பணிகள் செப்­டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையும் நடை­பெ­ற­வுள்­ள­துடன்

பொது சாதா­ரண பரீட்­சையின் மதிப்­பீட்டுப் பணிகள் செப்­டெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன.

மேலும் முதல் கட்ட மதிப்­பீட்டுப் பணிகள் 31 மத்­திய நிலை­யங்­களில் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் 446 குழுக்­க­ளூ­டாக ஒன்­ப­தா­யி­ரத்து 245 ஆசி­ரி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை எதிர்­வரும் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணிகள் எதிர்­வரும் 31 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. மதிப்­பீட்டு மத்­திய நிலை­யங்கள் 40 இல் இடம்பெறவுள்ள குறித்த பணிகளில் 384 குழுக்களூடாக ஆறாயிரத்து 965 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

907 total views