இந்திய கிரிக்கெட்டின் மோசமான காலம்

advertisement

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், 2007 உலகக் கோப்பைத் தொடர் மோசமானதாக அமைந்து விட்டது என்று சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார்.

மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குக் கூட இந்திய அணியால் முன்னேற முடியாமல் போனதாகக் கூறினார்.

வரலாற்றில் இந்திய அணி சந்தித்த மோசமான கால கட்டம் அது தான் என்று தெரிவித்த டெண்டுல்கர், ஆனால் அதன் பின்னர் சரியான திசையில், புதிய உத்வேகத்துடனும், சிந்தனைகளுடனும் செயல்பட்டு சிறந்த முடிவுகளை இந்திய அணி காண தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.