பம்பலப்பிட்டியில் உணவகம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை நிலை

Report
44Shares

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் பறிமாறப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

மரைன் ட்ரைவ் வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவொன்றில், மருந்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டர்’ இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவருந்த சென்ற வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2093 total views