பிரதமர் மோடிக்கு போட்டியாக பிச்சைக்காரர்கள் செய்த காரியத்தை பாருங்களேன்!

Report
6Shares

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள், 1 ரூபாய் நாணயத்தை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு, பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவினால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், பல இடங்களில் அன்றாட பொருட்களை வாங்குவது மிகவும் கடினமாக மாறியது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். இதுபற்றி தெரிவித்த பிச்சைக்காரர்கள், தற்போதைய 1 ரூபாய் நாணயம் மிகச் சிறிய அளவில் இருப்பதால் கடைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இதனால் பிச்சைக்காரர்கள் இனி 1 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இதனால் பிச்சைக்காரர்கள் மத்தியில் 1 ரூபாய் நாணயம் மதிப்பிழந்துள்ளது.

914 total views