‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸாகாதாம்

Report
1Shares
advertisement

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸாகாது என அட்லீ தெரிவித்துள்ளார்.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன்.

காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது. அடுத்ததாக, டிரெய்லர் எப்போது வருமென ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரெய்லர் ரிலீஸாகாது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அட்லீ.

.

1004 total views