அஜித்-சூர்யாவுடன் நடிக்க காத்திருக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரில்..?

advertisement

தமிழக மக்களை தற்போது பல சம்பவங்கள் ஆட்டுவித்து வந்தாலும், உற்சாகமாக ஆடவைத்த பாடல் ‘ஜிமிக்கி கம்மல்’.

மோகன்லால் நடித்த வெளிப்பாண்டிடே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர்.

தற்போது அது வைரலாகி ஒரு கோடி பார்வையாளர்களை தொடவுள்ளது.

இதில் ஆடிய கல்லூரி பேராசிரியை ஷெரில் தமிழகத்திலும் படு பாப்புலராகிவிட்டார்.

தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அவர் கூறும்போது.. “இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்க ரெடிதான்.

ஆனால் வீட்டில் ஓகே சொல்வார்களா? என்பதுதான் தெரியவில்லை.

தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்கள் அஜித், சூர்யாதான். சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்