பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'பரணி' நல்ல பாடம் கற்றுக்கொள்வார் - பரணியின் மனைவி.!

Report
19Shares

தனியார் தொலைக்காட்சியொன்று நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நகைச்சுவை நடிகர் பரணியை, பிற பங்கேற்பாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக இழிவாக பேசியும் கடிந்தும் வருகின்றனர். இவர் எனது தங்கை போன்றவர் என பரணி குறிப்பிட்ட ஜூலியும், பரணியை எலிமினேட் செய்ய கூறியுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார் பரணியின் மனைவி ரேவதி "அவர் வெள்ளந்தியான குணமுள்ளவர், அதன் காரணத்தாலேயே அவரை அனைவரும் டார்கெட் செய்கின்றனர். கஞ்சா கருப்பு அண்ணனுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என தெரியவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஓர் நல்ல பாடம் கற்றுக்கொள்வார் அவர்" என்கிறார் பரணியின் மனைவி ரேவதி.

பரணியின் தங்கை சத்தியா தேவியோ "எனது அண்ணண் பரணியின் உண்மையான பாசத்தை புரிந்துகொள்ளாமல், ஜூலி அவரை ஏளனமாக பேசிவருகிறார். என் அண்ணன் பிறரை உண்மையாக நம்புவதே அவரின் பலவீனம்" என குறிப்பிட்டார்.

ஆக, நிகழ்ச்சியெனும் பெயரில் மக்களின் உணர்வுகளுடன் விபரீத விளையாட்டு விளையாடுகிறது குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி.

1203 total views