தரமணி’யைப் பார்த்து வியந்த சித்தார்த்

Report
7Shares

‘தரமணி’ படத்தைத் தான் பார்த்துவிட்டதாகவும், தனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

ராம் இயக்கியுள்ள படம் ‘தரமணி’. வசந்த் ரவி, ஆன்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஜே. எஸ். கே. சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.

மறைந்த நா. முத்துக்குமார் பாடல் வரிகளுக்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாகப் போகிறது.

ஆனால், அதற்குள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டாராம் சித்தார்த். “ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘தரமணி’ ரிலீஸாகிறது.

நான் படத்தைப் பார்த்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இயக்குநர் ராமை நினைத்து பெருமிதமாக இருக்கிறது.

ஆன்ட்ரியாவின் நடிப்பு ப்ரில்லியண்டாக இருக்கிறது” என ட்வீட் செய்துள்ளார் சித்தார்த்.

.

537 total views