திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் பற்றகைள் அகற்றப்பட்டதால் மான்களின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவை உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் நிலை காணப்படுவதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடற்படைத்தள வீதியில் உள்ள உணவு விடுதிகளையும் இவைகள் விட்டு வைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான வீதி, மத்திய வீதி, ஏகாம்பரம் வீதி, பொதுச்சந்தை, கோணேசர் ஆலய வீதிகளில் இவை உணவுக்காக அலைகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.












