சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் சகோதரிக்கு வேலை வாய்பொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருமலை, மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டிற்கு நேற்று விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசானாவின் குடும்பத்தினருக்கு அரசினால் வீடமைத்துக் கொடுக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சிரானாவின் பிறந்தநாள் இன்றாகும். மூதூரில் 1988.02.04 பிறந்த ரிசானா நபீக் இன்று உயிருடன் இருந்திருந்தால் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பாரென்பது குறிப்பிடத்தக்கது.











