கிளிநொச்சி விசுவமடுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வசித்து வந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு படைத்தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பெருமளவான பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பெருமளவு மக்கள் பார்வையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















