கொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன.
சிறிலங்கா அரசாங்கம் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதுகுறித்து நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநதி பாலித கொஹன்னவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்போதே,”கொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது?” என்று கிண்டலாக அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.








