கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்தேவி புகையிரதச் சேவையானது, இந்த வருடம் செப்டம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் “இர்க்கோன்” என்ற நிறுவனமே தற்போது மேற்கொண்டு வருகின்றது.
காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.
எனவே இவ்வருடம் யாழ்.தேவியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்ல முடியும் என்றார்.








