இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரதம நீதியரசராக பதவியேற்ற சில மணித்தியாலங்களில் இது தொடர்பான முறைப்பாடு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
இதன்படி மொஹான் பீரிஸ் லஞ்ச ஊழல் சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபராக இருந்த காலத்தில் மொஹான் பீரிஸ் 75 லட்சம் ரூபாய் முறைகேடு சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு நிறுவனம் ஒன்று செலுத்த வேண்டியிருந்த 75 லட்சம் ரூபா சுங்கத் தீர்வையை மொஹான் பீரிஸ், சுங்கத் திணைக்களத்துடன் பேசி 26 லட்சம் ரூபாவாக அதனை குறைப்பு செய்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.








