சிராணியை விலக்கி மொஹானை நியமித்தமை, இஞ்சை கொடுத்து மிளகை வாங்கியது போன்றது!– சரத் என் சில்வா

January 16, 2013 Comments Off
சிராணியை விலக்கி மொஹானை நியமித்தமை, இஞ்சை கொடுத்து மிளகை வாங்கியது போன்றது!– சரத் என் சில்வா

சிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கலில் அரசியல் இருக்கக்கூடாது என்று குரலெழுப்பப்படடு வந்தது. எனினும் தமது அந்த கோரிக்கை பிழையானது என்று தெரிகிறது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமித்தமையானது இஞ்சை கொடுத்து மிளகு வாங்கிய கதையை போல உள்ளது.

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விடயத்தில் தாம் நடுநிலையை கடைப்பிடித்ததாக குறிப்பிட்டுள்ள சரத் என் சில்வா, தற்போது அது பிழை என்று புரிகிறது எனக் குறிப்பிட்டார்.

மொஹான் பீரிஸ் சட்டமா அதிபராக இருந்தபோது அவருக்கு எதிராக பல சர்ச்சைக்குரிய முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊடகவியலாளர் எக்னெலிக்கொட காணாமல் போனமை தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தெரிவித்த கருத்து நாட்டுக்கு அபகீர்த்தியை கொண்டு வந்து சேர்த்தது எனவும் சுட்டிக்காட்டினார்.