மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் பதவி விலக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக பொறுப்பாகும்.
நீதிமன்றம் என்ற உன்னத பூமியை இழிவுபடுத்த எவருக்கும் அனுமதியளிக்க முடியாது.
குற்றவியல் பிரேரணை தொடர்பில் சட்ட மற்றும் வங்கித்துறை நிபுணர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அவர்களின் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும்.
நீதிமன்றத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதில்லை.
குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்ற வட்டாரத்திலிருந்தே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
நாட்டை மீளக் கட்டியெழுப்பி அபிவிருத்தி பாதையில் நகரும் போது இவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.












