ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரவுடிக்கும்பலின் அடாவடித்தனம்

January 13, 2013 Comments Off
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரவுடிக்கும்பலின் அடாவடித்தனம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைய,செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் இருந்து வந்த சட்டத்தரணிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டத்தரணிகள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

அவர்கள் செல்லும் வழிகளில் காவற்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பேரணி ஹில்டன் விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆனால் இவ்விடத்தில் ஏற்கனவே தயாரா நின்ற குண்டர் படையினர், சட்டத்தரணிகள் மீதும் விரிவுரையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.