சவூதி அரேபியாவில் நேற்று சிரச் சேதம் செய்யப்பட்ட ரிசானா நபீக்கின் சடலம் அந்நாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சவூதிக்கான இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.
ரிசானாவின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென வெளிநாட்டு அமைச்சுக் கேட்டு இருந்தது.
ஆயினும் சவூதி அரேபிய நாட்டு சட்டத்தால் இது சாத்தியப்படாது என தூதரகம் விளக்கம் கொடுத்து இருந்தது.
2005 ஆம் ஆண்டில் சவூதி அரேபிய எஜமானரின் வீட்டில் இரு வாரங்கள் பணிப் பெண்ணாக வேலை பார்த்து இருந்தார் ரிசானா.
இவரிடம் நான்கு மாத குழந்தையை ஒப்படைத்து விட்டு பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர்.
குழந்தைக்கு ரிசானா புட்டிப் பால் கொடுத்து இருக்கின்றார். அப்போது குழந்தைக்கு புரையேறி குழந்தை இறந்து விட்டது.
இவர்தான் குழந்தையை கொன்று விட்டார் என்று எஜமானர் தவறாக முடிவெடுத்து விட்டனர்.
ரிசானாவின் வறுமையான குடும்பம்… சவூதி அரேபிய நீதிமன்றம் இவரை படுகொலைக் குற்றவாளியாக கண்டு மரண தண்டனைத் தீர்ப்பு விதித்தது.
இவரை மீட்க இராஜதந்திர, மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்து விட்டன.








