தண்ணீர்த்தொட்டியில் வாழ்ந்த 63 வயது முதியவர் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு

January 1, 2013 Comments Off
தண்ணீர்த்தொட்டியில் வாழ்ந்த 63 வயது முதியவர் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு

வானத்தை கூரையாக்கி, தண்ணீர் தொட்டியை வீடுமாக்கி வாழ்ந்த 63 வயது முதியவரின் வாழ்வு பற்றி நேற்று அறியப்பட்டது. வயது முதிர்ந்த தமக்கை ஒருவரின் பார்வை வீச்சில் இச்சம்பவம் தெரியவந்தது என கைதடி முதியோர் இல்ல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தபோது,

ஊரவர்கள் அவ்வப்போது உணவளித்திருக்கிறார்கள். இப்போது தனிமையும், வெறுமையும் இவரை உத்தியோகத்தர்களின் தேடலுக்குள் வரவைத்துள்ளது.

இணுவிலைப் பிறப்பிடமாகவும், எட்டியாந்தோட்டையை வளர்ப்பிடமாகவும், தற்போது பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் நேற்று புதிய அத்தியாயத்தை எழுதுவதற்காக முதியோர் இல்லத்தின் கூரைகளின் கீழ் பெருமூச்சுடன் காணப்படுகின்றார். முதிர்ந்து உதிர்ந்த முதுமையின் முகவரிகள் இன்று புதுமையாக கருவாகிக் கொண்டதை காணொளியில் காணுங்கள்.