ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச விண்வெளிக்குப் செல்ல ரஷ்யாவில் பயிற்சி

August 22, 2012 0
ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச விண்வெளிக்குப் செல்ல ரஷ்யாவில் பயிற்சி

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.

இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார்.

இதையடுத்து ரஷ்ய ஜனாதிபதியிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து ரோஹித ராஜபக்ச விரைவில் ரஷ்யா செல்ல இருக்கிறார்.

இதற்காக பெருந்தொகையான பணத்தை ராஜபக்ச ரஷ்யாவுக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை இலங்கை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து ராஜபக்சவை விளாசத் தொடங்கியிருக்கின்றன.

நாட்டின் விலைவாசி விண்ணை முட்டி நிற்கையில் ராஜபக்சவின் மகனுக்கு விண்வெளி பயணம் ஒரு கேடா? என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.