ரணிலின் தலைமைத்துவத்தில் காணப்படும் பலவீனங்களை அவருக்கு உதவி வருபவர்கள் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது

August 21, 2012 0
ரணிலின் தலைமைத்துவத்தில் காணப்படும் பலவீனங்களை அவருக்கு உதவி வருபவர்கள் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது

ரணிலின் சர்வாதிகார செயற்பாடுகள் குறித்து அவருக்கு உதவி வருபவர்கள் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது. ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் காணப்படும் பலவீனங்கள் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியாது என பண்டித்தரத்ன மற்றும் ஆர்.எஸ். ஜயரத்ன ஆகியோரின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகவும் எனினும் அவற்றை கவனத்தில் கொள்ளாது, தனக்கு சாதமாக வழங்கப்பட்ட ஸ்ரீநாத் பெரேராவின் அறிக்கையை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுவது நகைப்புக்குரியது என ஐக்கிய தேசியக்கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.   சிறிகொத்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதற்கான காரணங்கள் குறித்து கண்டறியவே ஸ்ரீநாத் பெரேரா நியமிக்கப்பட்டார். எனினும் அவர் வழங்கிய அறிக்கையில் கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு, ஒரு வருடத்திற்கு ஒரு முறை அல்லாமல், 6 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்.

தனக்கு சாதமாக அனைத்தையும் திருப்பி கொள்ளும் ரணில் விக்ரமசிங்கவின் இந்த தூரநோக்க செயற்பாடுகள், சர்வாதிகார செயற்பாடுகள் குறித்து அவருக்கு உதவி வருபவர்கள் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது.

எது எப்படி இருந்த போதிலும் அடுத்த ஒக்டோபர் மாதம், இந்த தலைவர் வீட்டுக்கு செல்ல வேண்டியேற்படும் என்பது எமது நம்பிக்கை. நீதிமன்றத்தின் உதவியுடன், கட்சியின் யாப்பை மீறி செயற்பட்ட அவரை நாங்கள் வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.